உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல் நினோவிலிருந்து பாதுகாக்க கொங்குகாசியில் பைரவர் வேள்வி

எல் நினோவிலிருந்து பாதுகாக்க கொங்குகாசியில் பைரவர் வேள்வி

ஆலாந்துறை: எல்நினோ பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க, ஆலாந்துறை அருகே உள்ள நாதே கவுண்டன் புதுாரிலுள்ள கொங்கு காசி அஷ்ட பைரவர் கோயிலில், மஹா பைரவர் வேள்வியும் கூட்டு வழிபாடும் நடந்தது.

இதில் பூசணி, அரசாணி, வாழைக்காய் உள்ளிட்ட, 18 வகையான நாட்டு காய்கறியும், அரசு, அத்தி, ஆல், மா, வெள்ளெருக்கு, துத்தி, அருகு உள்ளிட்ட, 11 வகையான மூலிகைகள், தானியங்கள், நறுமணபொருட்கள், வஸ்திரம், நவதானியம் உலர் பழங்கள் வேள்விச்சாலையில் இட்டு நவகிரஹங்களை துதித்து நவக்கிரஹ ஹோமமும், சிவபெருமானை வழிபட்டு மஹாமிருத்யுஞ்சய வேள்வியும், கூட்டு வழிபாடும் நடந்தது. முன்னதாக 11 அடி உயரத்தில் அருள்பாலித்து வரும் அஷ்ட பைரவர்களுக்கும் சகலதிரவிய அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !