உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிழப்பட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

கிழப்பட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டம் கீழப்பட்டு கிராமத்தில் வாய்க்கால் கரை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.

விழாவையொட்டி, அம்மனுக்கு நேற்று காலை பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள செய்த பின் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடந்தது. திரளான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

விழா ஏற்பாடுகளை கீழப்பட்டு கிராம பொது மக்கள் செய்திருந்தனர். சங்கராபுரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !