அத்திக்கோம்பை பட்டாளம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஒட்டன்சத்திரம்: அத்திக்கோம்பை பட்டாளம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தியும், பூச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
ஒட்டன்சத்திரம் அருகே கே.அத்திக்கோம்பை பட்டாளம்மன் கோயில் திருவிழா சாமி சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து பல்வேறு நதிகளில் இருந்து தீர்தக்கலசங்களில் எடுத்துவரப்பட்ட புனித நீர் வான வேடிக்கையுடன் ஊர்வலமாக பட்டாளம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. நேற்று காலை கங்கையிலிருந்து கரகம் பாலித்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்துஅலகு குத்தியும், பூச்சட்டி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.