உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடலூர் சத்திய ஞான சபையில் ஆனி பூச நட்சத்திர விழா

வடலூர் சத்திய ஞான சபையில் ஆனி பூச நட்சத்திர விழா

வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில், மாதப்பூச தினத்தில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.


வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை மற்றும், தருமச்சாலை மூலம், சன்மார்க்க கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இங்கு ஆனி மாத பூசம் நட்சத்திர தினமான நேற்று மாதப்பூச விழா நடந்தது. இரவு 7 45 மணிக்கு 6 திரைகள் விலக்கப்பட்டு சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூர் நெய்வேலி குறிஞ்சிப்பாடி சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சன்மார்க்கர்கள் ஜோதி தரிசனம் கண்டு வழிபாடு செய்தனர். தருமச்சாலையில் நேற்று நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஜோதி தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு தனியார் அறக்கட்டளையினர், வியாபாரிகள், பொதுமக்கள், சன்மார்க்கர்கள் சார்பில் ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !