சிறுவந்தாடு அங்காளம்மன் கோவிலில் அமாவாசை பூஜை
ADDED :14 hours ago
விழுப்புரம்: விழுப்புரம் அருகே சிறுவந்தாடு அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு துவங்கி நடந்தது. மூலவர் அங்காளம்மன், உற்சவர் அங்காளம்மமனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் அங்காளம்மன், ஆனந்தாயி, பூங்காவனம் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தனர். தொடர்ந்து, மாலை உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு 9:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினார். பம்பை உடுக்கை இசையுடன், அம்மனுக்கு தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.