தேவர்களாலும் அசுரர்களாலும் ஒருசேர வணங்கப்படும் இறைவன் ஜெகந்நாதர்; பிரதமர் மோடி
புதுடில்லி: ரத யாத்திரை ஆன்மிக கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும். இறைவன் ஜெகந்நாதரின் புனிதமான ரத யாத்திரை நன்னாளில், அவரது ஆசிகள் நம் அனைவர் மீதும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அவரது தெய்வீக அருள் நம் நாட்டு மக்கள் அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலை ஊட்டுவதாக அமைகட்டும். என பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒடிஷாவின் புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை இன்று நடை பெறுகிறது. இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ரத யாத்திரை எனும் இந்த நன்னாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மிக மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தின் தனித்துவமாகும்.
இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்துள்ளன. எல்லோருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை பகவான் ஜெகன்னாதர் அருளட்டும். நமது அனைத்து முயற்சிகளுக்கும் அவர் வலிமை அளிப்பதோடு, சமூகத்தில் ஒற்றுமை உணர்வையும் மேலும் வலுப்படுத்தட்டும். தேவர்களாலும் அசுரர்களாலும் ஒருசேர வணங்கப்படும் இறைவனான ஜெகன்னாதரே, பேரளவிலான புகழுக்குரியவரும், பிரபஞ்சத்தின் எல்லையற்ற, பரமாத்மாவுமான உமக்கு என் வணக்கங்கள்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேபோல் ஜெகந்நாத ரத யாத்திரையின் புனிதமான தருணத்தை முன்னிட்டு, இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, இந்த தருணம் உண்மையிலேயே தனித்துவமானது" என்று தெரிவித்தார்.