/
கோயில்கள் செய்திகள் / ஆடி செவ்வாய்; வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் புற்றுக்கு பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு
ஆடி செவ்வாய்; வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் புற்றுக்கு பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :1 days ago
வில்லிவாக்கம்: வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில், ஆடி மாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு 20,000த்திற்கும் மேற்பட்ட பெண்கள், புற்றுக்கு பால் ஊற்றி வழிப்பட்டனர். ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள நாகப்புற்றுக்கு பால் ஊற்றி வேண்டினால், நாகதோஷம் நீங்கி, திருமண தடை விலகி, குடும்பத்தில் வளம் பெருகும் என்பது ஐதீகம். அந்தவகையில், இன்று அதிகாலை 5:00 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பே ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அகத்தீஸ்வரர், அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமான பெண் பக்தர்கள், கோவில் வளாகத்தில் இருந்த புற்றுக்கு பால் ஊற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று மட்டும், 20,000க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.