உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில் காளி உத்சவம்; பால்குடம் எடுத்து வழிபாடு

திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில் காளி உத்சவம்; பால்குடம் எடுத்து வழிபாடு

திருவாலங்காடு: திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில், காளி உத்சவ விழா, இன்று விமரிசையாக தொடங்கியது. அதில், 301 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.


திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவிலுடன் இணைந்தது, திருவாலங்காடு பத்ரகாளியம்மன் கோவில். இந்த கோவிலில், ஆடி மாதம் 5ம் நாள் நடைபெறும் காளி உத்சவ விழா இன்று தொடங்கியது. இதையொட்டி, கிராம பெண்கள் 301 பேர் அம்மனுக்கு பால்குடம் எடுத்தனர். காலை 11:00 மணிக்கு, வடாரண்யேஸ்வரர் சன்னிதியில் இருந்து பால்குடம் எடுத்து புறப்பட்ட பெண்கள், 11:30 மணிக்கு பத்ரகாளியம்மன் சன்னிதியை சென்றடைந்து, பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இதில், திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இதையடுத்து, மாலை 6:00 மணிக்கு, காட்டுக்காளி வழிபாடு நடந்தது. தொடர்ந்து 8 நாட்கள், மாலை 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும் 29ம் தேதி காலை 6:00 மணிக்கு, சும்பன், நிசும்பன் படுகளம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !