திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுந்தரர் கைலாய காட்சி
ADDED :3 minutes ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானையில் அமர்ந்து கைலாய காட்சி நடந்தது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் ஆடி நன்னாளில் கையாலத்தை அடைந்தார் என்பது வரலாறு. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் கைலாய காட்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுந்தரர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க திருநொடித்தான் மலை என்ற பக்தி பாடலை பாடியபடி ஐராவதம் எனும் வெள்ளை யானை மீது சுந்தரமூர்த்தி நாயனார் அமர்ந்து கையாலத்திற்கு செல்லும் காட்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.