உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இரும்பை பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் வராகி மூல மந்திர ஹோமம்

இரும்பை பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் வராகி மூல மந்திர ஹோமம்

புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் ஸ்ரீவராகி மூல மந்திர ஹோமம் நேற்று நடந்தது.


புதுச்சேரி–திண்டிவனம் பைபாஸ் சாலை, குபேரன் நகர் டோல்கேட் அருகே, இரும்பை ஸ்ரீபாலாதிரிபுரசுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீவராகி மூல மந்திர ேஹாமம் நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு ஸ்ரீவரா கி மூல மந்திர ேஹாமம், கலசாபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு வராகி அம்மன் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !