அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலில், சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நேற்று விமரிசையாக நடந்தது.
அச்சிறுபாக்கத்தில் பிரசித்தி பெற்ற இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சைவ சமய குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. ஆடி மாத திருவிழாவையொட்டி சைவ சமய குறவரான சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா, நேற்று விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, ஆட்சீஸ்வரர், இளங்கிளியம்மன் மற்றும், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமூர்த்தி நாயனார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனார், சிவனுடன் கைலாயம் செல்லும் வைபவ நிகழ்வு விமரிசையாக நடந்தது. சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.