பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மஹா சுதர்சன ஹோமம்
ADDED :3 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று மஹா சுதர்சன ஹோமம் நடந்தது.
பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், சுவாதி நட்சத்திரத்தையொட்டி நேற்று மஹா சுதர்சன ஹோமம் நடந்தது. காலை, 9:30 மணி முதல், 11:00 மணி வரை மஹா சுதர்சன ேஹாமம், தன்வந்திரி ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி நடந்தது. தொடர்ந்து, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.