உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடிப்பூர தேரோட்டத்திற்கு தயாராகுது ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேர்

ஆடிப்பூர தேரோட்டத்திற்கு தயாராகுது ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் தேர்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு தேரினை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


இக்கோயிலில் இவ்வாண்டு ஆடிப்பூர தேரோட்டம் ஆக. 6ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஆக.14ல் தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு மே 28ல் தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து தேரை தயார் செய்யும் பணி துவங்கியது. ஏராளமான தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தேரில் படிந்துள்ள அழுக்குகள் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தலைமையில் கோயில் ஊழியர்கள், தேர் தயார் செய்யும் பணியினை கண்காணித்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !