உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா

மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் நடுத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நேற்று நடந்தது.

உத்திரமேரூர், பஜார் வீதி, நடுத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில், ஆடி மாத மஹோத்சவம் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

அதன்படி, நடப்பாண்டுக்கான உத்சவம் கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதை தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு ஆராதனை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. நேற்று, மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மன், அப்பகுதி முக்கிய வீதி களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீடுதோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.

விழாவின் நிறைவு நாளான வரும், 28ம் தேதி உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள அனைத்து பகுதியினரும் பங்கேற்கும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !