உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீ.பாளையம் பச்சையம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

வீ.பாளையம் பச்சையம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த வீ.பாளையம் கிராமத்தில் பச்சையம்மன் – பூவாயி அம்மன் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, வருண பூஜை, கலச பூஜை, தேவி மகாத்மிய பாராயணம் நடத்தி, விசேஷ ஹோமங்கள் மற்றும் 108 மூலிகை பொருட்களை மகாபூர்ணாகுதி சேர்ப்பித்து, மகா தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து, சுவாமிகளுக்கு சகலவித திரவியங்களால் மகாபிஷேகம், சிறப்பு அலங்காரம், அர்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வேண்டுதலை நிறைவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !