உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்

சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் திருப்பாவாடை உற்சவம்

செஞ்சி; செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பாவாடை உற்சவம் நடந்தது.


செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீதுள்ள ரங்கநாதர் கோவில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருப்பாவாடை உற்சவம் நடந்தது.இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் பகல் 12:00 மணிக்கு பல்வேறு வகையான பிரசாதம், பட்சனம் மற்றும் பழங்களுடன் திருப்பாவாடை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !