பாண்டுரங்கன் கோயிலில் நாளை ஏகாதசி விழா
ADDED :3 hours ago
சிவகங்கை: சிவகங்கை ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயிலில் இன்றும், நாளையும் ஆஷாட ஏகாதசி விழா நடக்கிறது.
இக்கோயிலில் இன்று காலை 8:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் விழா துவங்குகிறது.
இன்று காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பாண்டுரங்கனின் உற்சவ மூர்த்தி திருவடிகளை தொட்டு வணங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவும் நடைபெறும்.
நாளை (ஜூலை 25) காலை 8:00 மணிக்கு பாண்டுரங்கனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறும். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
மாலை 6:30 மணிக்கு பாண்டுரங்கன் திருவீதி உலா நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.