உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று சயன ஏகாதசி விரதம்: பெருமாளை வழிபட தீமைகள் விலகும்.. நினைத்த காரியம் நிறைவேறும்!

இன்று சயன ஏகாதசி விரதம்: பெருமாளை வழிபட தீமைகள் விலகும்.. நினைத்த காரியம் நிறைவேறும்!

ஆடி மாத வளர்பிறை ஏகாதசி ‘சயன ஏகாதசி’ அல்லது ‘தேவ சயன ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் மிக முக்கியமான ஒரு சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்த நாளில்தான் இருந்து தான் மகாவிஷ்ணு அடுத்த நான்கு மாதங்களுக்கு பாற்கடலில் யோக நித்திரை கொள்வதாக ஐதீகம். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கி, நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும் என்பது நம்பிக்கை. துவாதசி அன்று காலையில் நீராடி, பெருமாளை வழிபட்ட பிறகு துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு (பாரணை) செய்ய வேண்டும். அன்று உணவில் அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்வது வயிற்றுப் புண்களை ஆற்றும் ஆரோக்கியமான மரபாகும். இந்த விரதமிருந்து பெருமாளை வழிபட குடும்பத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என்கிறது பத்ம புராணம்.. இன்று வீட்டில் மகாவிஷ்ணுவை வழிபட நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !