உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் சக்கரை குளம் அசுத்தம் ஆண்டாள் பக்தர்கள் வேதனை

ஸ்ரீவில்லிபுத்துார் சக்கரை குளம் அசுத்தம் ஆண்டாள் பக்தர்கள் வேதனை

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சக்கரை குளத்தில் கழிவுகள் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை சுத்தம் செய்ய ஆண்டாள் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சக்கரை குளம், கீழ ரத வீதியில் இருந்து கீழ புதுத் தெருவிற்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக சேதம் அடைந்து காணப்பட்ட இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம், அம்ருத் திட்டத்தின் கீழ் சீரமைத்து ஆண்டாள் கோயிலிடம் ஒப்படைத்தது. ஆண்டாள் பக்தர்களால் புனிதமான குளமென கருதப்படும் இதில் கழிவுகள் கொட்டப்பட்டும், தண்ணீர் பாசி பிடித்தும் அசுத்தமான, நிலையில் காணப்படுவது பக்தர்களை வேதனைப்படுத்தி வருகிறது. சக்கரை குளத்தினை முழுமையாக சுத்தம் செய்து, தூய்மையான குளமாக உருவாக்க ஆண்டாள் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !