உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  புலிகுன்றம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் விமரிசை

 புலிகுன்றம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் விமரிசை

மாமல்லபுரம்: புலிகுன்றம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.


திருக்கழுக்குன்றம் அடுத்த, புலிகுன்றத்தில், பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், லட்சுமி நாராயண பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், ஸ்ரீனிவாசன், லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட சுவாமியர், பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். கோவிலின் பரிகாரம் கருதி நடத்தப்படும் பவித்ரோத்சவம், கடந்த 25ம் தேதி அங்குரார்ப்பணம், யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு உத்சவ பாராயணங்கள் தொடர்ந்து நடந்தன. விழாவின் நிறை நாளான நேற்று இரவு சுவாமியருக்கு புனித நுால் சாற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !