/
கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் 100 அடிக்கு மேல் உள்வாங்கிய கடல்: வெளியே தெரிந்த அம்மன் முகம்
திருச்செந்தூரில் 100 அடிக்கு மேல் உள்வாங்கிய கடல்: வெளியே தெரிந்த அம்மன் முகம்
ADDED :9 days ago
துாத்துக்குடி; திருச்செந்துார் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து, அய்யா கோவில் வரை சுமார் 100 அடிக்கு மேல் நேற்று கடல் உள்வாங்கி காணப்பட்டது.
அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலானது கடற்கரை அருகில் அமைந்துள்ளது. மேலும் இந்த கடல் நீர் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் கோவில் கடலானது நேற்று திடீரென கடல் உள்வாங்கியது பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதில் பாறைகளுக்கு இடையே பெண் உருவச் சிலையின் தலை பகுதி தென்பட்டது. இதை வெளியே எடுத்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.