பண்ருட்டி படை வீட்டம்மன் கோவில் செடல் உற்சவம்; திருத்தேரில் சுவாமி உலா
ADDED :20 hours ago
பண்ருட்டி: படை வீட்டம்மன் கோவில் செடல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி படை வீட்டம்மன் கோவில் பிரம்மோற்சவம் திருத்தேர் மற்றும் செடல் உற்சவம் கடந்த 15 ம்தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. அடுத்த நாள் கொடியேற்றம் நடந்தது. கடந்த, 17ம் தேதி முதல் தினந்தோறும் மாலை உற்சவர் அம்மன் ஊர்வலம், தீபாராதனை நடந்தது. நேற்று பிரம்மோற்சவ திருத்தேர், செடல் உற்சவத்தையொட்டி, காலை கெடில நதிக்கரையில் கரகம் ஊர்வலமாக சென்று, தீபாராதனை, பால் அபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு செடல் உற்சவம், தொடர்ந்து, திருத்தேரில் உற்சவர் விநாயகர், படைவீட்டம்மன், சுப்ரமணியர் அம்மன் திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாலை, 3:10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது.