உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

விழுப்புரம்: கோலியனுார் பூமி நீலா தாயார் சமேத வரதராஜ பெருமாள் கேtவிலில், ஏகாதசி விழா நடந்தது. அதனையொட்டி, காலை 9:00 மணிக்கு மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கு அபிஷேகங்களுடன் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் வரதராஜ பெருமாளுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தாயார்களுடன் அருள்பாலித்தார். ஸ்ரீதேவி பூதேவியுடனான உற்சவர் பெருமாளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 6.00 மணிக்கு கோவில் உள் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததனர்.









தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !