உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மழை வேண்டி வருண யாக பூஜை

வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மழை வேண்டி வருண யாக பூஜை

ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், மழை பொழிய வேண்டி நடந்த வருண யாக பூஜையில், நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் -– முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, சன்னிதி திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது; தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. உற்சவர் வள்ளி, தெய்வானை – சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7:30 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் முருகன் அருள்பாலித்தார்; காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு முன், பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, மழை பொழிய வேண்டி வருண யாக பூஜை நடந்தது; இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !