உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலய பூஜை முறை பயிற்சி; சான்றிதழ் வழங்கும் விழா

ஆலய பூஜை முறை பயிற்சி; சான்றிதழ் வழங்கும் விழா

அவிநாசி: தமிழ்நாடு கோவம்ச ஆண்டி பண்டாரத்தார் சமூக முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் அவிநாசி கோவம்ச சமூக திருமண மண்டப அறக்கட்டளை இணைந்து நடத்திய கட்டணமில்லா ஆலய வழிபாட்டு பயிற்சி முகாமின் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


பண்ணவாடி ஸ்ரீ பரமேஸ்வரர் திருமடம்வெங்கடேஸ்வர சுவாமிகள் தலைமையில், 20-ம் தேதி துவங்கி, 5 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாம் நிறைவு நாளான நேற்று மாநிலத் தலைவர் பிரகாசம் தலைமை வகித்தார். அறக்கட்டளை செயலாளர் சுப்ரமணியம் வரவேற்றார். திருமண மண்டபத் தலைவர் வேலுசாமி, பொருளாளர் கணேசன், மாநில பொருளாளர் தங்கவேல், மாநில செயல் தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தனர். கூனம்பட்டி திருமடம், குருகுல பாடசாலை முதல்வர் நடராஜ சுவாமிகள், திருப்புக்கொளியூர் ஆதீனம் ஸ்ரீ காமாட்சிதாச சுவாமிகள் மற்றும் ராமேஸ்வரம் ஹரி சிவனடியார் திருமடாலயம் அஹோரசிவம் கணேச சுவாமி ஆகியோர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !