வில்லியநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1 hours ago
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் மாரியம்மன் கோவிலில், ஆடி உற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா கடந்த 19 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை, 9.00 மணிக்கு காத்தவராயன் கதை நடந்தது. 20 ம் தேதி இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடந்தது. 21 ம் தேதி இரவு காத்தவராயன் கதை, 9.00 மணிக்கு சுவாமி வீதிஉலா, 24 ம் தேதி நண்பகல் 2.00 மணிக்கு கழுகு மரம் ஏறுதல், மாலை 4.00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. 25 ம் தேதி நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.