மானாமதுரை முத்துமாரியம்மன் கோயில் விழா: மஞ்சள் நீராடி மகிழ்ச்சி
ADDED :1 hours ago
மானாமதுரை: மானாமதுரை கண்ணார் தெரு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மஞ்சள் நீராடி பாரம்பரிய முறையில் கொண்டாடினர். இக்கோயிலில் கடந்தவாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்தனர். ஜூலை 24 ம் தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று, அலங்கார குளத்தில் கரைத்தனர். நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர். இதையடுத்து பக்தர்கள் மஞ்சள் நீராடி பாரம்பரிய முறையில் கொண்டாடினர்.