ஆயுள் அதிகரிக்க வாரியார் வழிசொல்கிறார்
* கிழக்கு நோக்கி சாப்பிடு. ஆயுள் அதிகரிக்கும்.
* எறும்பை போல சுறுசுறுப்பாக செயல்படு. மனஅமைதி கிடைக்கும்.
* பணம் சேர்ப்பதால் மட்டும் இன்பத்தை பெற முடியாது.
* ருசிக்கு அடிமையாகாதே. கிடைத்ததை திருப்தியாக சாப்பிடு.
* தன்னிடம் உள்ளதை மரம் பிறருக்கு கொடுக்கிறது. அதைப் போல நீயும் இரு.
* துாக்கம் வராத போது நீதி நுால்களைப் படி. நிம்மதி கிடைக்கும்.
* பொன் உருகினால் அதில் ரத்தினக்கல் பதியும்; மனம் உருகினால் கடவுளின் அருள் பதியும்.
* அனைவரிடமும் அளந்து பழகு. இல்லாவிட்டால் துன்பமே மிஞ்சும்.
* பெண்களை அழாமல் பார்த்துக் கொள்வது ஆணின் கடமை.
* கடவுளை வழிபடுவதைப் போல் அடியார்களையும் வழிபடு.
* உடற்பயிற்சியால் உடலும், தியானத்தால் மனமும் வலிமை பெறும்.
* தெய்வீக வழியில் நடப்பவர் ஒழுக்கமாக வாழ வேண்டும்.
* பிறர் செய்த உதவியை மறக்காதே. அதை மறப்பது பெரும்பாவம்.
* தற்போது நடக்கும் கலியுகத்தில், பக்தியின் மூலம் மோட்சம் பெறலாம்.
* சிவம் வேறு; அறிவு வேறல்ல. அறிவே சிவம்.