உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமண நடக்க வழிபட வேண்டிய அம்மன்

திருமண நடக்க வழிபட வேண்டிய அம்மன்

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மனை தரிசித்தால் திருமணம் நடக்கும்.
 
இங்குள்ள பூவனநாத சுவாமி கோயிலில் இவள் இருக்கிறாள். சங்கன், பதுமன் என்னும் நாக அரசர்கள் காடாக இருந்த இப்பகுதியில் சிவலிங்கத்தை வழிபட்டனர். பூவனத்தில் இருப்பதால் சுவாமிக்கு ‘பூவனநாதர்’ எனப் பெயர் வந்தது. முன்பு வெம்பக்கோட்டையை ஆட்சி செய்த செண்பக பாண்டியன் இந்தக்கோயிலை கட்டினார்.  இதனால்  அம்மனுக்கு ‘செண்பகவல்லி’ என பெயர் வந்தது.

மதுரை மீனாட்சி அம்மனைப் போல செண்பகவல்லி அம்மனுக்கே இங்கு முதலிடம். கருவறையில் உள்ள அம்மனின் உயரம் ஏழடி. வெள்ளிக்கிழமையன்று நெய் தீபம் ஏற்றினால் திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆடிப்பூர வளையல் திருவிழாவும், தைஅமாவாசையன்று 10,000 விளக்குகள் ஏற்றும் பத்ரதீப விழாவும் விசேஷமானவை.  

எப்படி செல்வது: கோவில்பட்டி பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 11:00 மணி; மாலை 4:00 –  8:00 மணி
தொடர்புக்கு: 04632 – 220 599


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !