உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் கோரதத்தில் புறப்பாடு

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தாயார் கோரதத்தில் புறப்பாடு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஆடிமாத மூன்றாம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு தாயார் கோரதத்தில் எழுந்தருளினார்.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 8:30 மணி வரை நித்திய பூஜைகள், 9:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார், தேகளீச பெருமாள், விஷ்ணு துர்க்கைக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு புஷ்பவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் கோரதத்தில் எழுந்தருளி தாயார் சன்னதியை வலம் வந்தார். மூலஸ்தானம் எழுந்தருளி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் உத்தரவின் பேரில், தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் மேற்பார்வையில் விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !