காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி சனி மகா அபிஷேகம்
ADDED :3 days ago
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது . தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடை சூழ திருக்கோவில் வலம் வந்து கல்யாண மண்டபம் அடைந்து சேவை சாதித்தார்.