மடக்கரை காளியம்மன் கோயிலில் வருண ஜெபம்; நவ துர்கா ஹோமம்
ADDED :1 days ago
பரமக்குடி: பரமக்குடி மடக்கரை காளியம்மன் கோயிலில் வருண ஜெபம் மற்றும் நவ துர்கா ஹோமம் நடந்தது.
பரமக்குடி ஐயாச்சாமி தெருவில் உள்ள மடக்கரை காளியம்மன் கோயிலில் ஆடி 3வது வெள்ளி விழா நடந்தது. காலை 8:00 மணி தொடங்கி அணுக்கை, விக்னேஸ்வர பூஜை, வருண ஜபம், வேதிகா அர்ச்சனை, அக்னி ஜெபம் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டன. காலை 10:30 மணிக்கு நவ துர்கா ஹோமம் நிறைவடைந்து, மகாபூர்ணாகுதி, அபிஷேக அலங்கார தீப தூப ஆராதனைகள் நடந்தன. மாலை 5:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீப ஆராதனைகள் நிறைவடைந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர்.