கோவையில் ஆஸ்திக சமாஜம் சார்பில் ராதாகல்யாண மகோத்சவம் கோலாகலம்
கோவை ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் இணைந்து நடத்தும் 27-ம் ஆண்டு நாம ப்ரச்சார வைபவம் மற்றும் ராதா கல்யாண மகோத்சவம் கோவை இடையர்பாளையம் வி ஆர் ஜி திருமண மஹாலில் நடந்தது.
முதல் நாள் நிகழ்வாக கடந்த வியாழக்கிழமை ஸ்ரீ மகா கணபதி ஹோமம் அதை தொடர்ந்து ஸ்ரீ ஞானானந்தா மற்றும் ஸ்ரீ பரமாச்சாரியார் பாதுகைகளுக்கு பூஜை மற்றும் ஆராதனை மற்றும் ரிக் வேத பாராயணம் ஸ்ரீ ஜகத்குரு டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது, அதை தொடர்ந்து கோவை வைத்தியநாதன் குழுவினரின் இன்னிசை கச்சேரி மற்றும் ஸ்ரீ மைதிலி இராமநாதன் குழுவினரின் நாராயணீயம் நிகழ்வு நடைபெற்றது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மேலோர் கோடு ஸ்ரீ ரவி பகவதர் குழுவினரின் கச்சேரி நடைபெற்றது.
இரண்டாம் நாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு சார்பில் யஜுர் வேத பாராயணத்தை தொடர்ந்து ஸ்ரீ கீத கோவிந்த மகா காவியம் ஜெயதேவ அஷ்டபதி நடைபெற்றது இதை கோவை ஸ்ரீ கௌதம் கண்ணன் பாகவதர் குழுவினர் நடத்தினர். மூக பஞ்சசதி மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பஞ்சரத்தின கீர்த்தனங்களை காமாட்சி ஸ்தோத்திர குழு ஸ்ரீமதி மோகனா கிருஷ்ணன் குழுவினர் நடத்தினர். மாலை 5 மணி அளவில் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மற்றும் ஸ்ரீ பத்ராசல ராமதாசர் மற்றும் ஸ்ரீ புரந்தரதாசர் கீர்த்தனங்கள் சென்னையை சேர்ந்த டாக்டர் ஸ்ரீமதி பைரவி வைத்தீஸ்வரன் குழுவினர் நடத்தினர்.
மூன்றாம் நாள் சனிக்கிழமை அன்று காலை 5 மணி முதல் சாம வேத பாராயணம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்ரீ பரமாச்சாரியார் விஷ்ணு சகஸ்ரநாம மண்டலி குழுவினர் நடத்தினர். காலை 8.30 மணி அளவில் ஊத்துக்காடு ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள் ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் ஸ்ரீ தியாகராஜ கீர்த்தனங்கள் நிகழ்வை சென்னையை சேர்ந்த டாக்டர் ஸ்ரீ பாகவதர் குழுவினர் நடத்தினர். மதியம் 3 மணியளவில் ராம தாசாதி கீர்த்தனங்கள் மற்றும் பூஜை தியானம் சென்னையை சேர்ந்த ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி குழுவினர் நடத்தினர். மாலை 6-15 மணி முதல் இரவு 11-30 மணி வரை திவ்யநாமம் மற்றும் டோலோத்சவம் நிகழ்வை கடையநல்லூரை சேர்ந்த ஸ்ரீ ராஜகோபால் தாஸ் பாகவதர் குழுவினர் நடத்தினர்.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜகத்குரு டிரஸ் சார்பில் வேதபாராயண நிகழ்ச்சி, உஞ்ச விருத்தி கோவையை சேர்ந்த நல்லிச்சேரி பிரம்மஸ்ரீ ஜம்புநாத கனபாடிகள் குழுவினர் நிகழ்த்தினார். காலை 9 மணியளவில் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை திருவிசலுரர் ஸ்ரீ ராமகிருஷ்ண பாகவதர் குழுவினர் நிகழ்த்தினார். மதியம் 4 மணிக்கு குமாரி காம்யா ஸ்ரீ பரஸ்ராம் குழுவினரின் பண்டரி பஜன், மாலை 6-15 மணி முதல் இரவு 9 மணி வரை ஆஞ்சநேய உற்சவத்தை ஹரித்வாரமங்கலம் ஸ்ரீராம் கோபால் பாகவதர் குழுவினர் நடத்துகின்றனர். நிறைவாக மங்கள ஆரத்தியுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் பக்தர்கள் அனைவருக்கும் காலை மாலை இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.