இறைவனுக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் பாகுபாடு கிடையாது
ராஜபாளையம்: ‘‘இறைவனுக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கிடையாது,’’ என ராஜபாளையம் கோதண்டராமசாமி கோயிலில் நேற்று சுந்தர ராமர் எனும் தலைப்பில் தாமல் ராமகிருஷ்ணன் சொற்பொழிவாற்றினார்.
மேலும் அவர் பேசியதாவது: தாய் சொல்வதை மீறக்கூடாது என ராமாயணம் சொல்கிறது. அதே நிலையில் குடும்பத்திற்கு விரோதமாக சுய லாபத்திற்காக ஒரு விஷயத்தை தாய் சொன்னாலும் கேட்காதே என ஒரே தர்மத்தை இரண்டு கதாபாத்திரம் மூலம் அயோத்தியா காண்டத்தில் ராமாயணம் கூறுகிறது. இறைவனுக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கிடையாது. பகவானுக்கு பிடிக்காதது பதவி கர்வம், பொருள் கர்வம், படிப்பு கர்வம். ராமாயணத்தில் காட்டும் தர்மம் இஷ்ட தெய்வம் இருந்தாலும் பெரியோர்கள் கைகாட்டும் குலதெய்வத்தை நோக்கி போக வேண்டும். ராமாயணத்தை முழுவதும் பாராயணம் செய்ய முடியாதவர்கள் சுந்தரகாண்டத்தை வாசித்து அதன் பலனை அடையலாம்.
குரு ஸ்தானத்தில் இருந்து ராமனையும் சீதையும் சேர்த்து வைத்தவர் அனுமன். ராமாயணம் முழுமையாக கூறுவதே சரணாகதி என்பதுதான். தர்மத்தை யார் காப்பாற்றினாலும் தர்மம் அவர்களை காக்கும் என்பதை ராமாயணம் எடுத்துரைக்கிறது. இவர் அவர் பேசினார்.