சித்தி வினாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :4729 days ago
நாமக்கல்: ரெட்டிப்பட்டி கங்கா நகர் சித்தி வினாயகர் கோவிலில், நாளை (பிப்., 1) திருவிளக்கு பூஜை நடக்க உள்ளது. நாமக்கல், ரெட்டிப்பட்டி கங்கா நகரில் சித்தி வினாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், நாளை உலக மக்களின் நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை, விசேஷ மகாலட்சுமி சிறப்பு பூஜையும் நடக்க உள்ளது. அதையொட்டி, மகா கணபதி பூஜை, நவகிரஹ பூஜை, தேவதா விசேஷ பூஜை, ஸ்ரீ லட்சுமி தேவ மூல மந்திர பூஜை சங்கரய்யர் சுவாமிகள் தலைமையில் நடக்கிறது.