உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுர காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா

மதுர காளியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா

அன்னூர்: எல் கோவில்பாளையம் மதுர காளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா துவங்கியது.

லக்கே பாளையம் கோவில்பாளையத்தில், 300 ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. ஈஞ்சங்குலத்தாரின் குலதெய்வமான இக்கோவிலில் பூச்சாட்டு திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது.

கடந்த 1ம் தேதி இரவு பக்தர்கள் அம்மனுக்கு தீர்த்த குடம் எடுத்து வருதல் நடந்தது. நேற்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை கணபதி ஹோமமும், காலை 11:30 மணிக்கு கங்கணம் கட்டுதலும் நடைபெறுகிறது. வருகிற 5ம் தேதி காலை 6:00 மணிக்கு பம்பை மேளத்துடன் அம்மன் அழைத்தலும், அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜையும் நடைபெறுகிறது.

காலை 9:00 மணிக்கு பொங்கல் வைத்தலும், மதியம் மாவிளக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது. மாலையில் 50க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பலியிடப்படுகிறது.

வருகிற 7ம் தேதி காலை 10:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், மறுபூஜையும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !