பத்ரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :18 hours ago
சூலூர்: சூலூர் அடுத்த குரும்பாளையத்தில், ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில், குரும்பா சமுதாயத்தின் அரச குல தாயாதிகள் ஸ்ரீ பத்ரகாளியம்மன் நல அறக்கட்டளை சார்பில், ஆடி மாத வெள்ளிக் கிழமையை ஒட்டி, சிறப்பு, 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
அலங்கரிக்கப்பட்ட திருவிளக்குகளுக்கு பக்தர்கள் மலர் தூவியும், குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிதாதார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
அறக்கட்டளை தலைவர் பீடம் பள்ளி கணேசன், காமராஜ், விஜயகுமார் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.