உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாளையில் இன்று ஆராதனை விழா

பாளையில் இன்று ஆராதனை விழா

திருநெல்வேலி: பாளை., தியாக பிரம்மம் இன்னிசை மண்டபத்தில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 166 வது ஆராதனை விழா இன்று (31ம் தேதி) நடக்கிறது.தியாகராஜ சுவாமிகளின் 166 வது ஆராதனை விழா இன்று நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 10.15 முதல் 11.15 மணி வரை சத்குரு சிலை கருவறையில் இருந்து மண்டபத்திற்கு எழுந்தருளி ஆராதனை, பஞ்சரத்ன கீர்த்தனை, 16 வகை அபிஷேகங்கள் நடக்கிறது.காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை சங்கீத வித்வான்கள், மாணவ, மாணவிகள் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர். இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஆஞ்சநேயர் உற்சவம், வழிபாடு நடக்கிறது.ஆராதனை விழாவை முன்னிட்டு கோயிலில் இருந்து சீதா பிராட்டி, இளைய பெருமாள், ஆஞ்சநேயர் சமேத ராமபிரான் உற்சவ மூர்த்திகள் தியாகப்பிரம்மம் இன்னிசை மண்டபத்தில் காலை 9 மணிக்கு எழுந்தருளி இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு காட்சி தரவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !