உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீசத்ய சாய் பக்தர்களின் பார்வை தந்த சேவை

ஸ்ரீசத்ய சாய் பக்தர்களின் பார்வை தந்த சேவை

திருப்பூர்: திருப்பூர் பி.என். ரோட்டில் உள்ள ஸ்ரீசத்ய சாய் சேவா மையத்தில் நேற்று மாதாந்திர இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் குழு முகாமை நடத்தியது. சேவா மைய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகாமில் 150 பேர் கலந்து கொண்டனர். இதில், 18 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்து அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் 62 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !