உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி

ஸ்ரீ பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி

ஒட்டன்சத்திரம்: பழைய ஒட்டன்சத்திரம் ஸ்ரீ பட்டத்து விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றுச் சென்றனர். ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !