உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வராஜ கணபதி சுவாமி, கருப்பராயன் கோவில் பொங்கல் விழா

செல்வராஜ கணபதி சுவாமி, கருப்பராயன் கோவில் பொங்கல் விழா

அனுப்பர்பாளையம்: திருப்பூர் அடுத்த 15 வேலம்பாளையம் சோளிபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ செல்வராஜ கணபதி சுவாமி மற்றும் ஶ்ரீ கருப்பராய சுவாமி ஆகிய கோவில் பொங்கல் விழா கடந்த 2 ம் தேதி முதல் தொடங்கி, நடைப்பெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 3 ம் தேதி மதியம் 2:00 மணிக்கு குதிரை வாகனம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் காவிலிபாளையத்தில் இருந்து அலங்கரித்த குதிரையை மேள தாளம் முழங்க நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவிலில் வைத்து கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், இரவு 8:00 மணிக்கு சலங்கை ஆட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இன்று 4 ம் தேதி மாலை 5:00 மணிக்கு பக்தர்கள் கோவிலுக்கு மா விளக்கு எடுத்து வருதல், தொடர்ந்து சலங்கை ஆட்டம் நடைப்பெறுகிறது. நாளை 5 ம் தேதி காலை 6:00 மணிக்கு பக்தர்கள் அருள்மிகு கருப்பராயன் சுவாமிக்கு பொங்கல் வைத்தல், இரவு 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சி நடப்பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !