உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பரஞ்சோதி மாரியம்மன் அருள்பாலிப்பு

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பரஞ்சோதி மாரியம்மன் அருள்பாலிப்பு

பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் பியூன்ஸ் காலனி கற்பக விநாயகர், பாலமுருகன், பரஞ்சோதி மாரியம்மன் திருக்கோயில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அம்மன், 31 லட்சம் மதிப்பு ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயிலில் நேற்று பரஞ்சோதி மாரியம்மனுக்கு, 500, 200,100, 50, 20, 10 ரூபாய் நோட்டுக்களால், 31 லட்சம் ரூபாய்க்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவையொட்டி சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், நல்லாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !