இந்தியாவிலேயே உயரமான முருகன் சிலை தமிழ்நாட்டில்..!
ADDED :4632 days ago
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பது பழமொழி. ஆனால் தமிழ்நாட்டில் நீலகிரி என்கிற மாவட்டமே மலைமேல் அமைந்து அங்கு எல்க் ஹில்ஸ் பகுதியில் பாலதண்டாயுதபாணிக்கு கோயில் அமைந்திருப்பது சிறப்பு. இந்த முருகன் கோயிலில் 40 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடப்பதை முன்னிட்டு 40 அடி உயர முருகன் சிலையை கோயிலுக்கு இடது புறம் அமைத்துள்ளனர். இந்தியாவிலேயே மிக அதிக உயரமான முருகன் சிலை இது தான் என சொல்லப்படுகிறது. இதன் அமைப்பு மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையைப்போலவே அமைந்திருப்பது சிறப்பு.
தகவல்: வி.பி. ஆலால சுந்தரம், கோவை.