உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரெகுநாதபுரத்தில் ஆடி 18 பெருக்கு சிறப்பு பூஜை

ரெகுநாதபுரத்தில் ஆடி 18 பெருக்கு சிறப்பு பூஜை

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு கோயில் அருகே உள்ள பஸ்மக்குளத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

தமிழ் மாதமான ஆடியில் வரும் 18ம் நாள் கொண்டாடப்படும் பாரம்பரிய விழா ஆகும்.

காவிரி போன்ற நதி நீருக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாய வளம் மற்றும் குடும்ப நலன் பெருகவும் இந்நன்னாளில் நீர்நிலைகளின் அருகில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. வல்லபை ஐயப்பன் கோயில் பின்புறம் உள்ள பஸ்மக்குளத்திற்கு தலைமை குருசாமி மோகன் தலைமையில் பூஜைகள் நடந்தது.

பால், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, பன்னீர் உள்ளிட்டவைகளால் குளத்தில் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது. உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும், பெண்களுக்கு மாங்கல்ய பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கமுதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் அருகே உள்ள அரச மரம், வேப்ப மரத்திற்கு திருமணம் நடந்தது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜை துவங்கி கணபதி ஹோமம், கோபூஜை, பூர்ணாஹீதி தீபாராதனை நடந்தது. பின் 16 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பருவமழை பெய்து விவசாயம் செழித்து மகசூல் பெற வேண்டி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசையுடன் இந்த திருமணம் நடந்தது.

சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்யம், வளையல், மஞ்சள் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கமுதி சிவபுராண மகளிர் குழு நிர்வாகிகள் செய்தனர். விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !