கொண்டத்து காளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
ADDED :2 hours ago
பெருமாநல்லுார்: -ஆடி பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, பெருமாநல்லுார் கொண்டத்து காளியம்மன் கோவிலிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு பூஜையையோட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. பண்டிகையை முன்னிட்டு, கொண்டத்து காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆன்மிக அன்னதான குழுக்கள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* பெருமாநல்லுார் அருகேயுள்ள ஈட்டிவீரம் பாளையம் ஊராட்சி, முட்டியங்கிணறு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பால ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.