உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் சமயபுரத்தாள் கோவில் பொங்கல் விழா

திருப்பூர் சமயபுரத்தாள் கோவில் பொங்கல் விழா

அனுப்பர்பாளையம்: திருப்பூர் அடுத்த நெருப்பெரிச்சல் ஜெ.ஜெ நகர் திருநங்கைகள் காலனியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ நாகாத்தாள், அருள்மிகு ஶ்ரீ சமயபுரத்தாள் கோவில் 16 ம் ஆண்டு பொங்கல் விழா கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. விழாவையொட்டி, கடந்த ஒன்றாம் தேதி காலை கூல் ஊற்றுதல், இரவு எல்லை தெய்வம் வழிபாடு. 2 ம் தேதி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் பால் குடம் எடுத்து வந்தனர். இரவு தாய் வீட்டு சீர் கொண்டு வருதல், சப்த கன்னிமார்கள் வழிபாடு உள்ளிட்டவை நடைபெற்றது. 3 ம் தேதி காலை பக்தர்கள் பொங்கல் வைத்தல், மா விளக்கு, முளைப்பாரி எடுத்து வந்தனர். மாலை நெருப்பெரிச்சல் பஸ் ஸ்டாப் முதல் கோவில் வரை முத்து பல்லக்கில் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திருநங்கைகள் அழகு குத்தியும், சாமி வேடம் அணிந்தும், மேள தாளம் முழங்க நடனம் ஆடி பாடி ஊர்வலமாக சென்றனர். அப்பகுதி பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று 4 ம் தேதி மதியம் மஞ்சள் நீராடி அம்மனை கங்கையில் குளிர வைத்து விழாவை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !