உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி விழா: நுாபுர கங்கையில் நீராடிய சுந்தரராஜ பெருமாள்

பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி விழா: நுாபுர கங்கையில் நீராடிய சுந்தரராஜ பெருமாள்

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.


பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மூலவர் பரமசுவாமி அருள் பாலித்தார். உற்சவர் சுந்தரராஜ பெருமாள் மதுரை திருமாலிருஞ்சோலை நுாபுர கங்கை தீர்த்தத்தில் நீராடும் வகையில் எழுந்தருளினார். காலை முதல் பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சோடச தீபாராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலையில் துவங்கி அன்னதானம் நடந்தது. 


*எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவர் திருப்பதி அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்சவருக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு பெருமாள் திருவிடந்தை ஸ்ரீ நித்திய கல்யாண பெருமாள், ஆதி வராகன் அலங்காரத்திலும் உடன் அகில வள்ளி தாயார், ஆண்டாள் நாச்சியார் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !