உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கண்ணப்புரம் அரசலாற்றில் பழங்கால அம்மன் சிலை கண்டெடுப்பு:

திருக்கண்ணப்புரம் அரசலாற்றில் பழங்கால அம்மன் சிலை கண்டெடுப்பு:

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் திருக்கண்ணப்புரம் அருகே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால அம்மன் சிலையை, வருவாய்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.


நாகை மாவட்டம் திருக்கண்ணப்புரம் அருகே கோட்டப் பாடி கிராமத்தில் பாயும் அரசலாற்றில், ஒன்றரை அடி உயரமுள்ள 25 கிலோ எடையுடைய அம்மன் சிலை கரை ஒதுங்கியுள்ளது. அப்பகுதிக்கு சென்ற கிராமத்தினர் சிலையை மீட்டு, வருவாய்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை ஐம்பொன்னால் ஆனதா? உலோக சிலையா? எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்று உடனடியாக தெரிய வரவில்லை. சம்பவ இடம் சென்ற வருவாய்துறையினர் சிலையை கைப்பற்றினர். இது குறித்து தகவலறிய நாகை, தாசில்தார் மற்றும் வருவாய்துறையினரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் இயலவில்லை..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !