ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.30 கோடி
ADDED :13 minutes ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ.1.30 கோடி வருவாயாக கிடைத்தது.
ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று சுவாமி, சன்னதி, அம்மன் சன்னதி மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர். இந்த காணிக்கைகள் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ரூ. 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாயும், தங்கம் 41 கிராம், வெள்ளி 3 கிலோ 283 கிராம் காணிக்கையாக கிடைத்தது. இந்த காணிக்கைகள் எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையர் ரவீந்திரன், பேஸ்கார்கள் கமலநாதன், முனியசாமி, கோயில் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.