சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடிக்கார்த்திகை; தங்க கவசத்தில் சுவாமி
ADDED :40 minutes ago
கும்பகோணம்; ஆடி கார்த்திகை பெருவிழாவை முன்னிட்டு கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படைவீடு கோவிலாக விளங்குவது கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி ஆலயமாகும். இவ் ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடி கிருத்திகை பெருவிழா.இதனை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் முருக கடவுளை வழிபட்டு வருகின்றனர். மூலவர் சுவாமிநாத சுவாமி தங்க கவச அலங்காரத்தில் வைர வேலுடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.